Monday, May 02, 2005

Devastated rape victim says she would rather die than live !

இந்த செய்தியை படிக்கும்போதே மனது பதைக்கிறது. இந்த அக்கிரமத்தை செய்த கேடு கெட்ட ஜென்மங்களை, மிருகங்களோடு ஒப்பிடுவது, அவற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 17 வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டதாக கதறும் இந்த அபலைக் குழந்தைக்கு என்ன கூறி ஆறுதல் தர முடியும் ? தன்னை எரித்துக் கொள்ளப் போவதாகவும் அப்பெண் கூறியிருப்பது, இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் நிலவும் அவலத்தையும், அயோக்கியத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்த மகாபாதகத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை கூட சரியான தீர்ப்பாக முடியாது. பழிக்கு பழி சரியான வழி இல்லை என்றாலும் கூட, இவ்வரக்கர்களை சித்ரவதை செய்து (அவர்களே தங்களை கொன்று விடுமாறு கெஞ்சும் அளவுக்கு!) இறுதியாக மக்கள் முன்னிலையில் கொல்லுவது நிச்சயம் தவறில்லை என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

1 மறுமொழிகள்:

பத்மா அர்விந்த் said...

இதே போல சமீபத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் உயர்வகுப்பு கூட்டத்தால் வன்புணரப்பட்டதும், பிறகு பத்திரிக்கைகளும் காவலர்களும் அவளை துன்புறுத்தியதும் மனித உரிமை கமிஷனுக்கு வந்ததை படித்திருப்பீர்கள். கர்ப்பிணி பெண்ணை காவலர்கள் கற்பழித்த செய்தியை நேற்றுத்தான் படித்தேன்.இந்த பெண்கள் வாழ நம் சமூகம் இன்னும் மன முதிர்ச்சியடையவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும். வீட்டினராலும், நண்பர்களாலும் கைவிடப்பட்டு, பத்திரிக்கைகளால் பரபர்ப்பு செய்திகளுக்கு விருந்தாகி இவர்கள் வாழ்வே அழிந்து போவதும், இறந்து போனபின் கற்புதெய்வமாய் இன்னும் சிலரால் போற்றப்படுவதும் அக்கிரமம்தான்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails